Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டை தயாரித்த மூன்று பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியீடு

புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டை தயாரித்த மூன்று பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியீடு

By: Karunakaran Wed, 26 Aug 2020 11:58:44 AM

புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டை தயாரித்த மூன்று பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வெளியீடு

கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் வெடிகுண்டுகள் நிறைந்த கார் பாதுகாப்புப் படையின் அணி வகுப்பு மீது மோதியது. இதனால் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் ஒரு ஜெய்ஷ் பயங்கரவாத பயிற்சி நிலையத்தை தாக்கியது.

புல்வாமாவில நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் முக்கிய சதிகாரர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத சூத்திரதாரி மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர் ரவூப் அஸ்கர் ஆகியோர் இருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

photos,three terrorists,bomb,pulwama attack ,புகைப்படங்கள், மூன்று பயங்கரவாதிகள், வெடிகுண்டு, புல்வாமா தாக்குதல்

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றைத் திட்டமிட்டு நிறைவேற்றியது எவ்வாறு என இந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. தேசிய புலனாய்வு சுட்டிக்காட்டிய பயங்கரவாதிகளில் 6 பேர் கொல்லப்பட்டனர், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து பேர் காணவில்லை, அவர்களில் மூன்று பேர் பாகிஸ்தானியர்கள் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை மீது மோதிய தற்கொலை குண்டு தயாரிக்க அம்மோனியம் நைட்ரேட் போன்ற பிற வெடிபொருட்கள் ஈ-காமர்ஸ் தளம் மூலம் வாங்கப்பட்டன. மேலும், உமர் பாரூக்கின் தொலைபேசியில் காணப்படும் ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட வெடிபொருட்களின் புகைப்படங்களுடன் அழைப்பு பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் அரட்டைகள் உள்ளன. இந்நிலையில் முதல் முறையாக, புல்வாமாவில் பயன்படுத்தப்பட்ட குண்டை மூன்று பயங்கரவாதிகள் தயாரித்த புகைப்படங்கள் குற்றப்பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

Tags :
|
|