Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்கள் வெளியீடு

இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்கள் வெளியீடு

By: Karunakaran Fri, 11 Dec 2020 2:00:02 PM

இரண்டாவது முறையாக நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்கள் வெளியீடு

விண்வெளியில் பறந்த முதல் வீரர் என்ற பட்டத்தை சோவியத் ரஷியாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்பவர் பெற்றார். அவரைத் தொடர்ந்து 1963-ம் ஆண்டு 3 நாட்கள் பூமியை வலம் வந்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமையை சோவியத் ரஷியாவைச் சேர்ந்த வாலன்டினா தெரஸ்காவோ பெற்றார். விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க வீரர் என்ற பட்டத்தை ஆலன் ஷெப்பர்ட் என்பவர் அடைந்தார். 1984-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் நாள் சோயூஸ் டி.11 என்ற சோவியத் நாட்டு விண்கலத்தில் பறந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் ஷர்மா அடைந்தார்.

36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் இன்றுவரை விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா என்ற பெண்மணியும் ஒருவர். விண்வெளியில் நிலவைச் சென்றடையும் முயற்சியில் அமெரிக்கா முதல் வெற்றியை அடைந்தது. இந்தியாவும் சந்திரயான்-1 என்ற விண்கலத்தைச் செலுத்தி 2008-ம் ஆண்டு நவம்பர் 14-ம் நாள் அதிலுள்ள ஒரு கருவியை வெற்றிகரமாக நிலவில் இறக்கிய பெருமையை அடைந்துள்ளது.

18 soldiers,moon,nasa,america ,18 வீரர்கள், சந்திரன், நாசா, அமெரிக்கா

இந்நிலையில், அமெரிக்காவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் 2-வது முறையாக நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக, நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக 18 விண்வெளி வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நாசா பயிற்சி அளிக்க உள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி என்பவர் உள்பட 9 ஆண் மற்றும் 9 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை அதிபர் மைக் பென்ஸ், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில், அறிமுகப்படுத்தினார். இதில் சில வீரர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதால் 5 வீரர்கள் மட்டுமே அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆர்டெமிஸ் திட்டத்தை 2024ல் நிறைவேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Tags :
|
|