Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்க்கு ... 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்க்கு ... 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியது

By: vaithegi Sat, 18 June 2022 2:18:32 PM

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்க்கு ... 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியது

இந்தியா: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த திட்டங்கள் ஜியோ பயனர்களுக்கான அறிமுக சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அடிப்படை ஜியோபோன் ரீசார்ஜ் திட்டம் ரூ. 155 இருந்தது. ஆனால் இந்த விலை உயர்வுக்குப் பிறகு அதே திட்டம் பயனர்களுக்கு ரூ.186 ஆக கிடைக்கும். இதே போல், மற்ற இரண்டு திட்டங்களின் விலையும் ரிலையன்ஸ் ஜியோவால் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடிப்படை ஜியோபோன் ரீசார்ஜ் திட்டமான ரூ. 155 இப்போது ரூ. 186 ஆக அதிகரித்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர இத்திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் கொடுக்கப்படுகிறது.

prepaid recharge,geo company,unlimited calls ,ப்ரீபெய்ட் ரீசார்ஜ்,ஜியோ நிறுவனம்,அன்லிமிடெட் கால்ஸ்

தொடர்ந்து ஜியோவின் ரூ. 185 திட்டம் இப்போது ரூ. 222 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை இதில் அடங்கும்.

அடுத்ததாக, ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தை கவனத்தில் கொள்கையில் ரூ. 249க்கான ரீசார்ஜ் திட்டம் மாதத்திற்கு மொத்தம் 30ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பிற நன்மைகள் வழங்கப்படாது. இரண்டாவதாக, ரூ. 299க்கான திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு மாதம் தோறும் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது. அதே போல கடைசியாக, ரூ. 349க்கான ஜியோஃபை ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லாமல் மாதத்திற்கு 50ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :