Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகை வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகை வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

By: Monisha Tue, 16 June 2020 6:09:26 PM

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகை வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 16 நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 46,504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 479-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 382-ஆக உள்ளது. சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள 3 மாவட்டங்களுக்கு வருகிற ஜூன் 19-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

tamil nadu,curfew,relief amount,corona virus,edappadi palanisamy ,தமிழ்நாடு,ஊரடங்கு,நிவாரண தொகை,கொரோனா வைரஸ்,எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரேசன் குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயை வருகிற 22-ந்தேதி முதல் ரேசன் குடும்ப அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|