Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண தொகை -தமிழக அரசு

கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண தொகை -தமிழக அரசு

By: Monisha Wed, 20 May 2020 11:55:19 AM

கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண தொகை -தமிழக அரசு

தமிழ்நாடு அரசு ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு பல்வேறு வகையில் உதவி அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கைத்தறி நெசவாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண தொகை வழங்கபடுவது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித்தொகை உட்பட பொது விதியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.

handloom weavers,government of tamil nadu,curfew,relief amount,rs.2000 ,கைத்தறி நெசவாளர்கள்,தமிழக அரசு,ஊரடங்கு,நிவாரண தொகை,ரூ.2000

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு செய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ஊரடங்கு கால நிவாரண தொகையான ரூ.2000 வழங்கப்படும்.

தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|