Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

By: Monisha Mon, 15 June 2020 6:25:58 PM

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

full curfew,tamil nadu,corona virus,cm edappadi palanisamy,relief help ,முழு ஊரடங்கு,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி,நிவாரண உதவி

இதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :