Advertisement

மனித நேயத்தை உணர்த்தும் வகையில் மத நல்லிணக்க சீர்

By: Nagaraj Fri, 17 Mar 2023 6:28:37 PM

மனித நேயத்தை உணர்த்தும் வகையில் மத நல்லிணக்க சீர்

புதுக்கோட்டை: மத நல்லிணக்க சீர்... மதங்களைக் கடந்து மனித நேயத்தை உணர்த்தும் வகையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து - கிறிஸ்தவம் - முஸ்லிம் என மும்மதத்தினரும் தங்களது மத குருமார்கள் தலைமையில் ஒரு சேர மத நல்லிணக்க சீர் கொண்டு வந்தது காண்போதை நெகிழ வைத்தது.

தமிழகத்தில் புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்துக்களின் கோயில் திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வருவதும் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர் கொண்டு செல்வதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

fruits,reconciliation seer,plates,pudukottai,elasticity ,பழங்கள், மதநல்லிணக்க சீர், தட்டுக்கள், புதுக்கோட்டை, நெகிழ்ச்சி

இதற்கெல்லாம் மகுடமாக புதுக்கோட்டை காமராஜபுரம் 9ம் வீதியில் அமைந்துள்ள 47 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஸ்ஜித் முஹம்மது இப்ராஹீம் ஜூம்ஆ பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு ஜும்ஆ பள்ளிவாசலின் திறப்பு நடைபெற்றது.

விழாவில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி, இந்து பட்டாச்சியர், இஸ்லாமிய ஹசரத் உள்ளிட்ட மத குருமார்கள் தலைமையில் ஜாதி மத சமூக பாகுபாடுகளை கடந்து அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து பள்ளிவாசலுக்கு அனைத்து பழங்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்திய படி மதநல்லிணக்க சீர் கொண்டு செல்கின்றனர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags :
|
|