Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் முதியவரின் கண்களில் இருந்து 20 உயிருள்ள புழுக்கள் நீக்கம்

சீனாவில் முதியவரின் கண்களில் இருந்து 20 உயிருள்ள புழுக்கள் நீக்கம்

By: Nagaraj Fri, 30 Oct 2020 8:11:05 PM

சீனாவில் முதியவரின் கண்களில் இருந்து 20 உயிருள்ள புழுக்கள் நீக்கம்

முதியவரின் கண்ணில் புழுக்கள்... சீனாவில் வசிக்கின்ற வான்(60) எனும் முதியவரின் கண்களில் இருந்து சுமார் 20 உயிருள்ள புழுக்களை மருத்துவக்குழுவினர் நீக்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு அவருடைய கண்களில் ஏதே ஊர்வது போல உணர்ந்த முதியவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து இருக்கின்றார்.

elder,worm in the eyes,chance,animals,china ,முதியவர், கண்களில் புழு, வாய்ப்பு, விலங்குகள், சீனா

அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வலது கண்ணிமைக்குக் கீழே சிறிய புழுக்கள் இருப்பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

சிகிச்சை நடந்த போது அவருடைய கண்ணில் இருந்து 20க்கும் மேற்பட்ட புழுக்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இதுகுறித்துக் கூறிய மருத்துவர், இந்த வகை புழுக்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வர வாய்ப்புண்டு. எனவே, சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

Tags :
|
|