Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

By: Nagaraj Thu, 23 Mar 2023 7:54:42 PM

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

புதுடெல்லி: பதிலடி நடவடிக்கையா?... டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பதிலடி நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாபில் அம்ரித் பால் என்ற பிரிவினைவாதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து லண்டனில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய சீக்கியர்கள் அங்குள்ள இந்திய தேசியக் கொடியையும் கீழே இழுத்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் உயர் அதிகாரியை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.

action,barricades,british embassy, ,இங்கிலாந்து தூதரகம், டெல்லி, தடுப்புகள்

இதற்கிடையில், அதன் எதிரொலியாக, டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இது தவிர பிரித்தானிய தூதுவர் அலெக்ஸ் எல்லிஸ் வீட்டின் முன் போடப்பட்டிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இங்கிலாந்து போதிய பாதுகாப்பை வழங்காததற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அதேநேரம், நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அலெக்ஸ் எல்லிஸ், பாதுகாப்பு விஷயங்களில் நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் வெளியுறவு அமைச்சகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Tags :
|