Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பேருக்கு கரோனா .. அமர்வுகள் மாற்றியமைப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பேருக்கு கரோனா .. அமர்வுகள் மாற்றியமைப்பு

By: vaithegi Sun, 23 Apr 2023 10:50:08 AM

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பேருக்கு கரோனா ..  அமர்வுகள் மாற்றியமைப்பு

இந்தியா: நீதிபதிகளுக்கு பேருக்கு கரோனா வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றியமைப்பு ... கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் குணமடைந்தார்.இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ்,எஸ்.ரவீந்திர பட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் பல நீதிபதிகளின் குடும்பத்தினருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமண வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து கொண்டு வருகிறது.

sessions,corona,supreme court ,அமர்வுகள் ,கரோனா ,உச்ச நீதிமன்றம்

இதையடுத்து இந்த அமர்வில் கடந்த வியாழக்கிழமை வரை விசாரணை நடத்தி வந்த நீதிபதி ரவீந்திர பட்டுக்கு தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், மற்ற 4 நீதிபதிகளும், தங்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என கண்காணித்து கொண்டு வருகின்றனர்.

தன்பாலின திருமண வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தொடர்ந்து விசாரிக்க இருந்தது. இந்நிலையில், இந்த அமர்வில் 1 நீதிபதிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்த அமர்வின் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அவசர நிலை காரணமாக நீதிபதி கவுல் நாளை நீதிமன்றத்துக்கு வரமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கமடைவதை தடுக்க, புதிய 2 அமர்வுகளுக்கு வழக்குகளை தலைமை நீதிபதி மாற்றியுள்ளார்.

Tags :
|