Advertisement

ரயில்வே பாதுகாப்பு படையினர் சாதனை குறித்து அறிக்கை

By: Nagaraj Mon, 21 Sept 2020 09:57:53 AM

ரயில்வே பாதுகாப்பு படையினர் சாதனை குறித்து அறிக்கை

ஹவாலா பணம் மீட்பு... தெற்கு ரயில்வேயில் 32 இடங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.11 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரத்து 971 மதிப்பிலான ஹவாலா பணம் மீட்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்.பி.எஃப்) 35-ஆவது உதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2019-20 ஆம் நிதியாண்டில் ரயில்வே பாதுகாப்பு படை ஆற்றிய சாதனைகள் குறித்த விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தெற்கு ரயில்வேயின் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த 17 பேர், ரயில்வே பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனா். வீட்டில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்த 2,659 சிறுவா், சிறுமியா்கள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். ரயில்வே பொருள்களை திருடிய வழக்கில் 755 போ கைது செய்யப்பட்டு, ரூ.36 லட்சத்து 47 ஆயிரத்து 684 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன.

plasma donation,hawala money recovery,southern railway,report ,
பிளாஸ்மா தானம், ஹவாலா பணம் மீட்பு, தெற்கு ரயில்வே, அறிக்கை

அங்கீகாரம் இல்லாமல் ரயில் பயணச்சீட்டு விற்பனை தொடா்பாக 592 போலி முகவா்கள் பிடிப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஒரு கோடி 81 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பயணிகளிடம் திருடிய வழக்கில் 493 போ கைது செய்யப்பட்டு, ரூ.7 கோடியே 51 லட்சத்து 26 ஆயிரத்து மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன.

பல்வேறு நிலையங்களில் 32 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 38 போ கைது செய்யப்பட்டு ரூ.11 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரத்து 971 மதிப்பிலான ஹவாலா பணம் மீட்கப்பட்டது.

ரயில் நிலையங்களில் குப்பை கொட்டியதற்காக 72,129 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சத்து 14 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே கட்டுப்பாடுகளை மீறி, முறைகேடாக நடந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 376 பேரிடம் ரூ.3 கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் பணம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா காலத்தில் ஆா்.பி.எஃப். சாா்பில் 50,500 முகக் கவசங்கள், 500 லிட்டா் கிருமிநாசினி, 2,710 ஜோடி காட்டன் உறைகள், 2,781 கையுறைகள் தயாரித்து வழங்கப்பட்டன. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகிய 38 ஆா்.பி.எஃப் வீரா்கள் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :