Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன்னர் சார்லஸ் எடுக்கும் முயற்சி குறித்து வெளியான தகவல்கள்

மன்னர் சார்லஸ் எடுக்கும் முயற்சி குறித்து வெளியான தகவல்கள்

By: Nagaraj Sun, 16 Oct 2022 10:52:44 PM

மன்னர் சார்லஸ் எடுக்கும் முயற்சி குறித்து வெளியான தகவல்கள்

பிரிட்டன்: மன்னர் சார்லஸ் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன தெரியுங்களா?

பக்கிங்ஹாம் அரண்மனை ராணி கமிலாவின் பட்டத்திலிருந்து ‘கன்சார்ட்’ ஐ அமைதியாக கைவிடும் என்றும், மே 2023-ல் சார்லஸும் கமிலாவும் முடிசூட்டப்படும் வரை இந்த மாற்றம் படிப்படியாக நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இளவரசராக இருந்த சார்லஸ் மன்னராகும் கமிலா ராணி கன்சார்ட் என்ற பட்டத்தை பெறுவார் என ராணி இரண்டாம் எலிசபெத் பிப்ரவரியில் அறிவித்தார். அவர் அப்போது கூறுகையில், “என் மகன் சார்லஸ் மன்னராவார். நீங்கள் எனக்கு அளித்த அதே ஆதரவை அவருக்கும் அவர் மனைவி கமீலாவுக்கும் கொடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

attempt,camilla,king charles,late queen,queen,will ,

கமீலா, மன்னர் சார்லஸ், மறைந்த ராணி, முயற்சி, ராணி, விருப்பம்

அந்த நேரம் வரும்போது, கமிலா தனது சொந்த விசுவாசமான சேவையைத் தொடர்வதால், ராணி மனைவி (Queen Consort) என்று அழைக்கப்பட வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம் என மறைந்த ராணியார் பிரித்தானிய மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் மறைந்த ராணியின் விருப்பத்திற்கு மாறாக கமீலாவை வெறுமென ராணி என்று மாற்ற மன்னர் சார்லஸ் முயற்சித்து வருகிறார். அத்துடன் அவர் தனது மனைவிக்கு முழுமையாக ‘ராணி’ என்று பட்டமளிக்க அனைத்து உரிமைகளும் அதிகாரமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|