Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூட்டுறவு வங்கிகள் குறித்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

கூட்டுறவு வங்கிகள் குறித்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

By: Nagaraj Sat, 27 June 2020 1:50:18 PM

கூட்டுறவு வங்கிகள் குறித்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

கிராம மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுக்க உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் பெருமளவில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.

approval provided,co-operative banks,law,ramnath govind ,ஒப்புதல். அளித்தார், கூட்டுறவு வங்கிகள், சட்டம், ராம்நாத் கோவிந்த்

இந்த வங்கிகளில் முறைகேடு நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுவது உண்டு. இதனால், இவற்றை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நாடாளுமன்றம் கூட்டப்படாத நிலையில், கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தும் அவசர சட்டத்தைக் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் படி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

வங்கிகள் ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

Tags :
|