Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்க கோரிக்கை

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்க கோரிக்கை

By: Nagaraj Thu, 24 Sept 2020 10:51:36 AM

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்க கோரிக்கை

பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை...தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

காணொலி மூலம் பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து விளக்கினார்.

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக கொரோனா இறப்பு விகிதம் 1.62 சதவிகிதமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

rs.1000 crore,finance,prime minister,chief minister,tamil nadu ,ரூ.1000 கோடி, நிதி, பிரதமர், முதல்வர், தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு தினமும் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், இதில் சரிபாதியை மத்திய அரசு வழங்க வேண்டுமென முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக தமிழக அரசுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags :