Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலை சிற்றுண்டி திட்டம் .. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை

காலை சிற்றுண்டி திட்டம் .. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை

By: vaithegi Fri, 31 Mar 2023 3:45:50 PM

காலை சிற்றுண்டி திட்டம்  .. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் காலை வேளையில் மாணவர்களுக்கு உணவளிக்கும் விதமாக கடந்தாண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்தார்.

இதனை அடுத்து இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரவா உப்புமா, சேமியா உள்ளிட்ட உணவு வகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் வாயிலாக தற்போது தமிழகத்தின் 1,543 அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

breakfast scheme,govt aided school ,காலை சிற்றுண்டி திட்டம்,அரசு உதவி பெறும் பள்ளி

இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடப்பு நிதியாண்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்த ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.

Tags :