Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து அரசிடம் கோரிக்கை

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து அரசிடம் கோரிக்கை

By: vaithegi Fri, 13 Oct 2023 4:18:47 PM

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து அரசிடம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு 25 சதவீதமும் , அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீதமும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். என்று அந்தந்த துறைக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.

இதனை அடுத்து அதில் மின்வாரியத்தலைவர் ராஜேஷ் லக்கானிக்கு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலர் ஏ. சேக்கிழார் அனுப்பிய கடிதத்தில், கடந்த 2020-ம் ஆண்டு வரை மின்வாரியத்தில் பணி செய்வோருக்கு தீபாவளி போனஸ் வழங்குவது பற்றி பேசி முடிவு செய்யப்பட்டது.

demand,diwali,government employees ,கோரிக்கை,தீபாவளி ,அரசு ஊழியர்கள்

கடந்த 2021,22 ஆண்டுகளில் கொரோனா காரணமாக பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. இந்தாண்டு தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே போனஸ் வழங்க பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். மின் வாரியத்தில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்கள் அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். அதே போன்று நிலை 1, 2ல் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தீபாவளி பரிசாக வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 1 மாத ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று போக்குவரத்து தொழிலாளர்கள் எழுதிய கடிதத்தில், தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கொரோனாவிற்கு முன் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தீபாவளி போனஸ் 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதனால் இந்தாண்டு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :
|
|