Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கள் குடும்ப பெண்ணை மீட்க நூதன செயலை செய்து கோரிக்கை

தங்கள் குடும்ப பெண்ணை மீட்க நூதன செயலை செய்து கோரிக்கை

By: Nagaraj Sun, 26 Nov 2023 10:42:57 PM

தங்கள் குடும்ப பெண்ணை மீட்க நூதன செயலை செய்து கோரிக்கை

இஸ்ரேல்: நூதன செயல்... ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ள இஸ்ரேல் பெண்மணி யார்டன் ரோமனை விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் நூதன செயலில் ஈடுபட்டனர்.

50 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் படையினரிடம் சிக்கி குடும்பமாக கடத்தப்பட்டபோது பெண்ணின் கணவரும் குழந்தையும் நடுவழியில் தப்பினர். பின்னர் இருவரும் இஸ்ரேல் ராணுவத்தால் மீட்கப்பட்ட நிலையில், யார்டன் ரோமனின் கதி தெரியாமல் இருந்தது.

artificial trekking,liberation,yarden roman,family ,செயற்கை மலையேற்றம், விடுதலை, யார்டன் ரோமன், குடும்பத்தினர்

இந்நிலையில் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், யார்டன் ரோமன் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ளது.

மலை ஏற்றத்தில் ஆர்வம் கொண்ட யார்டன் ரோமனின் விடுதலையை வலியுறுத்தும் வாசகம் கொண்ட பனியனை அணிந்தபடி, அவரது குடும்பத்தினர், செயற்கை மலையேற்ற சுவரில் ஏறினர்.

Tags :