Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரிசிக்கொம்பன் யானையை கேரள வனப்பகுதிக்குள் விட கோரிக்கை

அரிசிக்கொம்பன் யானையை கேரள வனப்பகுதிக்குள் விட கோரிக்கை

By: Nagaraj Sun, 11 June 2023 10:51:04 PM

அரிசிக்கொம்பன் யானையை கேரள வனப்பகுதிக்குள் விட கோரிக்கை

திருவனந்தபுரம்: அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் கேரள வனப்பகுதிக்குள் விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் ரேஷன் கடைகளை தாக்கி அரிசி சாப்பிட்ட அரிக்கொம்பன் என்ற யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

பின்னர் பெரியாறு வனச்சரகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன், தமிழகத்தின் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அரிசிக்கொம்பன் என்ற பெயரில் மக்களை மிரட்டியது. பின்னர், கடும் எதிர்ப்புக்கு பின், மயக்க ஊசி செலுத்தி, அரசிக் கொம்பனை பிடித்த வனத்துறையினர், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப் பூங்காவில் உள்ள மேல் கோதையார் பகுதியில் விடுவித்தனர்.

காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அரிசி கொம்பனின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அப்பர் கோதையாறு, குற்றியார், முத்துக்குழிவயல் ஆகிய பகுதிகளில் இருந்து 5 கி.மீ.க்குள் அரிசிக்கொம்பன் வந்தாலும், குமரி, நெல்லை மாவட்ட மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

attached,kochi,release, ,விடுத்துள்ளனர், விடுமாறு, வேண்டுகோள், சமூக ஆர்வலர்கள், அரிசிக்கொம்பன் யானை

அரிசிக்கொம்பனை கண்காணித்து வரும் 2 மாவட்ட வனத்துறையினரும், மக்களும் அச்சப்பட தேவையில்லை. காட்டில் அமைதியான சூழல், உணவு, குளிர்ந்த நீர் போன்றவற்றால் அரிசிக்கொம்பன் அங்கிருந்து வருவதில்லை. அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொச்சியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், அந்த அரிசி கொம்பன் யானையை மீண்டும் கேரள வனப்பகுதிக்குள் விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை வலியுறுத்தி பாலக்காடு அருகே உள்ள கணபதி கோயிலிலும் யாகம் நடத்தினர். 2 மணி நேரம் நடந்த இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொச்சி மரைன் டிரைவில் பேரணியும் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் அரிசி கொம்பன் யானையை கேரளாவிற்கு கொண்டு வர வலியுறுத்தினர்.

Tags :
|