Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காதலி என்று மம்மியுடன் அலைந்த வாலிபரிடம் இருந்து மீட்பு

காதலி என்று மம்மியுடன் அலைந்த வாலிபரிடம் இருந்து மீட்பு

By: Nagaraj Wed, 01 Mar 2023 11:34:17 PM

காதலி என்று மம்மியுடன் அலைந்த வாலிபரிடம் இருந்து மீட்பு

பெரு: காதலி என்று மம்மியுடன் அலைந்த வாலிபர்... உணவு டெலிவரி பையில் 800 ஆண்டு பழமையான மம்மியை காதலி என்று தூக்கி கொண்டு அலைந்த வாலிபரிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ (26). உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த போலீசார் அங்கு சீசர் வைத்திருந்த உணவு டெலிவரி பையை திறந்து பார்க்கும் போது, அதில் மம்மி உடல் இருந்ததை போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடரபாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மம்மியை அவரது அப்பா 30 வருடங்களுக்கு முன்பு வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

mummy,opened,police,see , உணவு, காதலி, பெரு, மம்மி

சீசர் பெர்மேஜோ அந்த மம்மியை “தனது ஆன்மீக காதலி” என்றும் கூறியுள்ளார். மேலும் நான் அவளோடு உரையாடுவேன் என்றவர்.வீட்டில், அது என் அறையில் இருக்கும், அதனுடன் தான் நான் தூங்குவேன். எனது நண்பர்களுக்குக் காட்டுவதற்காக மம்மியை எடுத்து வந்ததாகக் கூறி உள்ளார். இதனை அடுத்து அவரிடமிருந்த மம்மியை போலீசார் அதனை தொல் பொருள் ஆராய்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

மம்மியை ஆராய்ச்சி செய்த கலாச்சார அமைப்பு வெளியிட்ட தகவலில் மம்மி இறந்த ஆண் நபரின் உடலாகும். 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானது என மஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய மம்மி. இந்த மம்மி குறைந்தது 45 வயதுடைய மனிதனுடையதாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

மம்மி பழங்கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக பெரு அரசு கூறியுள்ளது.

Tags :
|
|
|