Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற பள்ளி மாணவர்கள் மீட்பு

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற பள்ளி மாணவர்கள் மீட்பு

By: Karunakaran Fri, 18 Dec 2020 08:41:37 AM

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற பள்ளி மாணவர்கள் மீட்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணம் கங்கரா என்ற பகுதியில் அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் 450-க்கும் அதிகமானோரை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

rescue,school children,terrorists,nigeria ,மீட்பு, பள்ளி குழந்தைகள், பயங்கரவாதிகள், நைஜீரியா

இதையடுத்து, பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளை தேடும் பணியில் போலீசாரும், ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கூடம் அமைந்துள்ள கட்சினா மாகாணத்திற்கு அருகே உள்ள சம்பரா மாகாணத்தில் உள்ள ருகு காட்டுப்பகுதியில் மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக, மாணவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த காட்டுப்பகுதியை நைஜீரிய பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தபோது போகோ ஹராம் பயங்கரவாதிகளில் பிடியில் இருந்த 344 மாணவர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். போகோ ஹராம் பயங்கரவாதிகள் மாணவர்களை விட்டுவிட்டு காட்டுப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். எஞ்சிய சில மாணவர்களை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்துள்ளனர். மீட்கப்பட்ட 344 மாணவர்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags :
|