Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் ஆய்வின் போது அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்

தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் ஆய்வின் போது அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்

By: Nagaraj Wed, 12 Oct 2022 11:24:23 AM

தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் ஆய்வின் போது அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்

இத்தாலி: அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு... முதல் முறையாக தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலை அதிகரித்து உள்ளது.


ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பாலிஎதிலீன், பிவிசி மற்றும் பாலிபுரோப்பிலீன் ஆகியவற்றால் ஆனது என்று கூறப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இத்தாலியின் ரோமில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்து உள்ளனர்.

trauma,breastfeeding,microplastics,infant,study ,
அதிர்ச்சி, தாய்ப்பால், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ், குழந்தை, ஆய்வு

தாய்மார்களின் மாதிரிகளில் சுமார் 75 சதவீதம் மைக்ரோபிளாஸ்டிக்ஸால் மாசுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆய்வு குறித்து இத்தாலியின் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வாலண்டினா நோட்டார்ஸ்டெபனோ கூறியதாவது:- "தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கான ஆதாரம், குழந்தைகளின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகை பற்றிய நமது அக்கறையை அதிகரிக்கிறது.

" தாய்மார்கள் தொகுக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதையும் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், பற்பசை பயன்படுத்துவதையும் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் கொண்ட செயற்கை துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.


ஒரு பாட்டில் மூலம் குழந்தைகளுக்கு உணவளிப்பதன் மூலம் ஒரே நாளில் மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸை விழுங்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
|
|