Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது; தமிழகத்திற்கு கிடையாது

சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது; தமிழகத்திற்கு கிடையாது

By: Nagaraj Thu, 21 May 2020 1:05:08 PM

சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது; தமிழகத்திற்கு கிடையாது

இந்தியா முழுவதும் வரும் ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கியது. ஆனால் இந்த ரயில்கள் தமிழகத்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 1 முதல், இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

reservation,start,today,special trains,tamil nadu ,முன்பதிவு, தொடக்கம், இன்று, சிறப்பு ரயில்கள், தமிழகம்

வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். விரைவில் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. இந்த ரயிலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு ரயில் சேவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|