Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் பெறுவதற்கு முன்பதிவு செய்திருப்பது அவசியம்....ஜூலை மாதம் முதல் அமல்

இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் பெறுவதற்கு முன்பதிவு செய்திருப்பது அவசியம்....ஜூலை மாதம் முதல் அமல்

By: vaithegi Wed, 15 June 2022 7:55:01 PM

இலங்கையில்  பெட்ரோல் மற்றும் டீசல் பெறுவதற்கு முன்பதிவு செய்திருப்பது அவசியம்....ஜூலை மாதம் முதல் அமல்

இலங்கை: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை வரலாறு காணாத அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால், இலங்கை சுதந்திரம் பெற்ற கடந்த 1948- ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. மேலும் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாததால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் மின் விநியோகம் பாதித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.

மேலும் நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்பவருக்கு மட்டும் வாரந்தோறும் பெட்ரோல், டீசல், எரிவாயு விற்பனை செய்யும் புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கஞ்சன விஜேசேகர, பெட்ரோல், டீசல் விநியோகம் தொடர்பாக சில கருத்துகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

coal,petrol,diesel fuel ,நிலக்கரி ,பெட்ரோல், டீசல் எரிபொருள்

அதில், இலங்கையில் 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கவும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்தை சீராக சாத்தியமாக்கும் வரையிலும் ஜூலை மாதம் முதல் புதிய நடைமுறையை அமல்படுத்தும் முறை உள்ளது. அதன்படி, எரிபொருள் தேவை உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் வாரம் ஒரு முறை ரேஷன் முறையில் அவர்களுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விநியோகிக்கப்படும். இந்த கோட்டா முறை ஜூலை முதல் அமலுக்கு வருகிறது என்று கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

இதனிடையே பெட்ரோல்- டீசல் தட்டுப்பாட்டை அடுத்து இலங்கையில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் எனவும், வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில காலத்துக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிகிறது. எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து இந்த நடவடிக்கையை இலங்கை அரசு தெரிவித்துள்ளது..

Tags :
|
|