Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் .. ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் .. ரிசர்வ் வங்கி ஆளுநர்

By: vaithegi Thu, 08 June 2023 1:13:17 PM

ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் ..  ரிசர்வ் வங்கி ஆளுநர்

இந்தியா: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. எனவே அதன்படி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்து உள்ளார்.

இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி (SDF விகிதம்) 6.25% ஆகவும், விளிம்பு நிலை மற்றும் வங்கி விகிதங்கள் 6.75% ஆகவும் உள்ளது.நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

reserve bank governor,repo rate ,ரிசர்வ் வங்கி ஆளுநர்,ரெப்போ வட்டி விகிதம்

மேலும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் விகிதம் 4%க்கு மேலாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு இருந்ததை விட அதிக வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டு வருகிறது.

அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, 2023-24 ம் ஆண்டிற்கான CPI இன் பணவீக்கம் 5.1% ஆக இருக்கும் என்றுள்ளார். மேலும், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்று வருவதால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்து உள்ளார்.

Tags :