Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து விதி மீறல் .. வங்கிகளுக்கு அபராதத்தை விதித்த ரிசர்வ் வங்கி

தொடர்ந்து விதி மீறல் .. வங்கிகளுக்கு அபராதத்தை விதித்த ரிசர்வ் வங்கி

By: vaithegi Tue, 21 Mar 2023 11:41:08 AM

தொடர்ந்து விதி மீறல்   ..  வங்கிகளுக்கு அபராதத்தை விதித்த  ரிசர்வ் வங்கி

இந்தியா: இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி கொண்டு வருகின்றன. வங்கிகள் தொடர்பான வழிமுறைகள், வட்டி விகிதம் என்று அனைத்தையும் ரிசர்வ் வங்கி தான் கவனித்து கொள்கின்றன.

இதையடுத்து தற்போது சில வங்கி விதிமுறைகளை மீறியதற்காக ஹெச்டிஎஃப்சி லிமிடெட் (HDFC) வங்கி மீது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்திருக்கிறது. மேலும், கடன் மீட்பு முகவர் தொடர்பான விதிகளைப் பின்பற்றாத காரணத்தினால் ஆர்பிஎல் (RBL ) வங்கி மீதும் ரூ.2.27 கோடி அபராதத்தை விதித்துள்ளது.

bank,reserve bank ,வங்கி , ரிசர்வ் வங்கி

இதனை அடுத்து இந்த விதிமுறைகள் பற்றி ரிசர்வ் வங்கியிடம் கேட்ட போது வங்கிகளுக்கான நியாயமான நடைமுறைகள் குறியீடு, வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள், இடர் மேலாண்மை, நிதி சேவைகள் மற்றும் மீட்பு முகவர்களின் அவுட்சோர்சிங் போன்ற விதிமுறைகளுக்கு உட்படாத காரணத்தினால் தான் அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படும் போது வங்கிகளுக்கான உரிமமே ரத்து செய்ய நேரிடும் என்று அறிவித்துள்ளது. இந்த பிரச்சனைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|