Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் இணைக்க தீர்மானம்

சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் இணைக்க தீர்மானம்

By: Nagaraj Thu, 17 Sept 2020 7:38:28 PM

சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் இணைக்க தீர்மானம்

அரச சேவையில் இணைக்க தீர்மானம்... சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

public administration,international studies,ethics,industry ,அரச நிர்வாகம், சர்வதேச கற்கை, நெறி, தொழில்

அதனடிப்படையில் எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கற்பித்தல் பணிகளுக்காக உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

அந்தவகையில், சர்வதேச கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு இந்த நாட்டில் தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags :
|