Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் 100 இடங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க தீர்மானம்

வேளாண் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் 100 இடங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க தீர்மானம்

By: Monisha Sat, 12 Dec 2020 2:38:35 PM

வேளாண் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் 100 இடங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க தீர்மானம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களில் எத்தகைய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கி சொல்ல முடிவு செய்துள்ளது. உரிய விளக்கம் அளித்தால்தான் வேளாண் சட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து நாடு முழுவதும் 100 இடங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் உள்ள 700 இடங்களில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேதிகள் அறிவிக்கப்படும். இந்த சந்திப்புகளின்போது விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் வெளியிடப்படும்.

agricultural law,farmer,struggle,journalist,awareness ,வேளாண்சட்டம்,விவசாயி,போராட்டம்,பத்திரிகையாளர்,விழிப்புணர்வு

மூன்று புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சந்தேகங்கள் பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்படும். மேலும் சட்டங்களில் செய்யப்பட உள்ள திருத்தங்கள் பற்றியும் மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது. இதன்மூலம் புதிய வேளாண் சட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

விவசாய சட்டங்கள் குறித்து இதுவரை பிரதமர் மோடி 25 தடவை பல்வேறு தரப்பினருடன் பேசி உள்ளார். அவரது கருத்துகள் 2.23 கோடி எஸ்.எம்.எஸ். மூலம் விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் மோடியின் விளக்கம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் சுமார் 92 லட்சம் விவசாயிகளை சென்றடைந்திருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

Tags :
|