சிவப்பு அரிசி, பருப்பு, டின் மீன் விலையை குறைக்க தீர்மானம்
By: Nagaraj Thu, 17 Nov 2022 4:26:14 PM
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் போராட்டத்திற்கு பின்பு புதிய அரசு அமைந்தது. ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றார். இதற்கிடையில் பால்மா விலை உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு 205 ரூபாய்க்கு விற்கப்படும். 1 கிலோ பருப்பு (சிவப்பு) 9 ரூபாய் குறைக்கப்படும் 389 ரூபாய்க்கு விற்கப்படும். 425 கிராம் மீன் டின் 45 ரூபாய் குறைக்கப்பட்டு 540 ரூபாய்க்கு விற்கப்படும்.
இவ்வாறு இந்த மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.