Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விமர்சனத்திற்கு பதிலடி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விமர்சனத்திற்கு பதிலடி

By: Nagaraj Mon, 14 Aug 2023 06:37:29 AM

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விமர்சனத்திற்கு பதிலடி

சென்னை: 1989 ஆம் ஆண்டில் அவங்க இந்தியாவிலேயே இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விமர்சனத்திற்கு திருச்சி சிவா பதில் அளித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே இல்லாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்தது போல பேசி இருக்கிறார் என்று தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

london,union minister,parliament,attack,diversion ,லண்டன், மத்திய அமைச்சர், சட்டப்பேரவை, தாக்குதல், திசை திருப்பும்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் பிரச்னையை திசை திருப்பும் செயலில்தான் மத்திய அரசு ஈடுபட்டதாக தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் ஆண்டில் நிர்மலா சீதாராமன் லண்டனில் இருந்ததாக திருச்சி சிவா குறிப்பிட்டார்.

Tags :
|
|