Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

By: Monisha Thu, 06 Aug 2020 09:47:42 AM

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு 'சீல்' வைத்து வருகின்றனர்.

chennai,corona virus,restricted areas,vulnerability,chennai corporation ,சென்னை,கொரோனா வைரஸ்,கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்,பாதிப்பு,சென்னை மாநகராட்சி

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தநிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் ஏற்கனவே 66 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வெகுவாக குறைந்து 24 தெருக்களுக்கு மட்டும் 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

Tags :