Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூன்று மாதங்களுக்கு பின் நியூயார்க்கில் கட்டுப்பாடுகள் தளர்வு; இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

மூன்று மாதங்களுக்கு பின் நியூயார்க்கில் கட்டுப்பாடுகள் தளர்வு; இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

By: Nagaraj Tue, 09 June 2020 12:08:06 PM

மூன்று மாதங்களுக்கு பின் நியூயார்க்கில் கட்டுப்பாடுகள் தளர்வு; இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

கட்டுப்பாடுகள் தளர்வு... கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நியூயார்க்கில் 3 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைக்கு திரும்பினர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மையமாக நியுயார்க் மாகாணமும் திகழ்ந்தது. பிற எந்தவொரு மாகாணத்தையும், நகரத்தையும் விட இங்குதான் கொரோனா தொற்று அதிகளவில் இருந்தது. நியூயார்க் மாகாணத்தில் மட்டுமே 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க 3 மாதங்கள் பொது முடக்கத்தின்கீழ் வைக்கப்பட்டன. அமெரிக்க பொருளாதார சரிவில் நியூயார்க் முக்கிய பங்கு வகித்தது.

new york,stores opening,restrictions relaxed,normalcy ,நியூயார்க், கடைகள் திறப்பு, கட்டுப்பாடுகள் தளர்வு, இயல்பு நிலை

நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு பதிவாகி நேற்றுடன் 100 நாட்கள் ஆனது. இந்த நிலையில் அங்கு நேற்று கட்டுப்பாடுகள் தளர்வு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து சுமார் 4 லட்சம் பேர் நேற்று முதல் வேலைக்கு திரும்பி உள்ளனர். கட்டுமானத்துறை, சில்லரை விற்பனை துறை போன்றவை முதல் கட்டமாக செயல்படத்தொடங்கி உள்ளன. ஜவுளித்துறையிலும் பணியாளர்கள் வேலைக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர்.

தினந்தோறும் கொரோனாவுக்கு 800-க்கு மேற்பட்டவர்களை பலி கொண்ட நகரம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது. நேற்று மாகாணம் முழுவதும் சில்லரை விற்பனை கடைகள் பரவலாக திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

Tags :