Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் குறைந்தது

சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் குறைந்தது

By: vaithegi Tue, 11 July 2023 09:48:23 AM

சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் குறைந்தது

சென்னை: சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 10 ரூபாய் குறைந்து ரூ. 130க்கு விற்பனை ... கடுமையான வெயில் மற்றும் திடீர் மழை காரணமாக இந்தாண்டு தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இதன்காரணமாக தக்காளி வரத்து குறைந்து, விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

மேலும் அத்துடன் வெளிமாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்தும் வெகுவாக குறைந்து உள்ளதே விலையேற்றத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையடுத்து கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், தற்போது வரத்து குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.

tomato,koyambedu market,chennai ,தக்காளி ,சென்னை கோயம்பேடு சந்தை

மேலும் நேற்று மொத்த விற்பனையில் தக்காளி கிலோவிற்கு 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 140 ரூபாயாகவும் விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ₹100-க்கு விற்பனையாகிறது.அதைத்தொடர்ந்து சில்லரை விற்பனையில் 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 220 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Tags :
|