Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதபோதகர் ஜெரோம் மனு வரும் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பரிசீலனை

மதபோதகர் ஜெரோம் மனு வரும் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பரிசீலனை

By: Nagaraj Thu, 01 June 2023 10:51:16 AM

மதபோதகர் ஜெரோம் மனு வரும் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பரிசீலனை

கொழும்பு: வரும் 5ம் தேதி அழைக்கப்பட உள்ளார்... மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார்.

அவர்களை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

இதன்படி, அன்றைய தினம் திறந்த நீதிமன்றில் இந்த மனு விவாதிக்கப்படவுள்ளதுடன், மனுதாரர் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன கருத்துகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

petition,order,fundamental right,human rights,will be violated ,மனுதாக்கல், உத்தரவு, அடிப்படை உரிமை, மனித உரிமைகள், மீறப்படும்

அத்துடன் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags :
|