Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரிசி ஜிஎஸ்டி வரி ... அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்

அரிசி ஜிஎஸ்டி வரி ... அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்

By: vaithegi Sat, 16 July 2022 4:31:13 PM

அரிசி ஜிஎஸ்டி வரி ... அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்

இந்தியா: இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பொருட்கள் விற்பனைக்கும் ஒரே விதமான வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஒரே இந்தியா, ஒரே வரி என்னும் நோக்கத்தில் இந்த வரி முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சண்டிகரில் 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால் ஒரு கிலோ அரிசி ரூ.3 முதல் ரூ.5 வரை விலை உயரும் என்று கூறப்படுகிறது. அதனால் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

rice,owners,strike ,அரிசி , உரிமையாளர்கள், வேலை நிறுத்தம்

மேலும் தமிழகத்திலும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 1000 அரிசி கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை பிராட்வே கொத்தவால் சாவடி மார்க்கெட், மற்றும் கோயம்பேடு உணவு பொருள் அங்காடியில் உள்ள அரிசி கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டுள்ளது.


தற்போது அரிசிக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரியால் அரிசி உற்பத்தி, விற்பனை தொழில் பெருமளவு பாதிக்கப்படும். மேலும் அரிசி மொத்த, சில்லறை விற்பனை செய்யும் அரிசி வியாபாரிகள் வேறு தொழிலுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் அரிசி கடைகள், ஆலைகள் மூடப்பட்டன.
இதனால் பொதுமக்கள் அரிசி வாங்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tags :
|
|