Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் நடைபெற்ற பேரணியில் கலவரம்

டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் நடைபெற்ற பேரணியில் கலவரம்

By: Karunakaran Sun, 06 Sept 2020 4:25:03 PM

டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் நடைபெற்ற பேரணியில் கலவரம்

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றபின், அங்கு கறுப்பினத்திற்கு எதிரான செயல்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஏற்கனவே ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தை சேர்ந்தவர் போலீசார் பிடியில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் கறுப்பினத்தை சேர்ந்த டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கான ஆதாரம் தற்போது வெளியாகியதால் அங்கு கறுப்பினத்தவர்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. டேனியல் புரூடி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு அமைதியாக சென்ற பேரணி, நீதிமன்ற வீதியில் சென்றபோது, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

riots,rally,united states,daniel broody ,கலவரம், பேரணி, அமெரிக்கா, டேனியல் ப்ரூடி

சட்டவிரோதமாக கூடுவதை தவிர்த்துவிட்டு அனைவரும் கலைந்து செல்ல போலீசார் அறிவித்தும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசத் தொடங்கியதையடுத்து, அங்கு கலவரம் வெடித்தது. சனிக்கிழமை இரவும் போராட்டம் நீடித்தது.

இந்நிலையில் புரூடியை கைது செய்து போலீசார் அழைத்து சென்ற வீடியோ பதிவுகளை அவரது குடும்பத்தினர் இந்த வாரம் வெளியிட, அது போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாற்றியுள்ளது. கடந்த வார இறுதியில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் போது , நிறவெறி மற்றும் போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

Tags :
|
|