Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 21 June 2020 8:27:03 PM

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான வசந்தம் கார்த்திகேயனுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

healers,corona,rishivantiyam,mla ,குணமடைந்தோர், கொரோனா, ரிஷிவந்தியம், எம்எல்ஏ

ஏற்கனவே அவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரளா: கேரளாவில் இன்று மேலும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 133 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தற்போது கேரளத்தில் 1,490 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1659 ஆக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags :
|