Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டில்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வுக்கூட்டம்

டில்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வுக்கூட்டம்

By: Nagaraj Mon, 16 Nov 2020 09:13:25 AM

டில்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வுக்கூட்டம்

மத்திய அமைச்சர் ஆய்வு... டில்லியில், திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, நேற்று ஆய்வு செய்தார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார்.

delhi,corona,increase,union minister,hospitals ,டில்லி, கொரோனா, அதிகரிப்பு, மத்திய அமைச்சர், மருத்துவமனைகள்

டில்லி கவர்னர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ் வர்தன், டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பண்டிகை காலம் துவங்கியுள்ளதாலும், டில்லியில் குளிர் அதிகரித்து வருவதாலும், காற்று மாசு அதிகரித்து வருவதாலும், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதாக, இந்த ஆய்வின்போது கூறப்பட்டது.

டில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை அமைப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக அளவில் இருப்பு வைப்பது என, இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்களை, நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து, விமானங்களில் அழைத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags :
|
|