Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகரிக்கும் சிலிண்டர் விலை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதிகரிக்கும் சிலிண்டர் விலை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

By: Nagaraj Mon, 03 Apr 2023 10:05:51 AM

அதிகரிக்கும் சிலிண்டர் விலை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடில்லி: இந்தியாவில் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் விலைவாசி உயர்வின் காரணமாக சமையல் எரிவாயுவின் (சிலிண்டர்) விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

இதையடுத்து தற்போது ரூ.1000/- தாண்டிய நிலையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு வந்த நிர்மலா சீதாராமனிடம் காஞ்சிபுர மக்கள் சிலிண்டர் விலை உயர்வை பற்றி கேள்வி எழுப்பினர்.

nirmala sitharaman,cylinder,price ,நிர்மலா சீதாராமன்,சிலிண்டர், விலை, விளக்கம்

அதற்கு பதிலளித்த நிர்மலா, சிலிண்டரில் நிரப்பக்கூடிய சமையல் எரிவாயு ஆனது நமது நாட்டில் கிடைக்காது. எனவே, அதனை வெளியிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம்.

இதனால் அரசு பாதிக்கு பாதி விலை (ரூ.600/-) கொடுத்துவிட்டு மக்களுக்கு மானியமாக வழங்க தான் நினைக்கிறது. ஆனால், இதர நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இதற்கான நிதி போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :