Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அனைத்து உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலை உயர்வு

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அனைத்து உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலை உயர்வு

By: vaithegi Mon, 27 June 2022 3:16:53 PM

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அனைத்து  உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலை உயர்வு

இலங்கை: பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதனால் இவற்றை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு 2 வாரங்களுக்கு தடை என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுத்துறை அரசு ஊழியர்கள் 2 வாரம் வீட்டில் இருந்தபடியே பணி புரிய வேண்டும்.

sri lanka,food products ,இலங்கை,உணவுப் பொருட்கள்

மேலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல், கோதுமை மாவு, உணவு வகைகள், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக பொது போக்குவரத்துகளின் டிக்கெட் விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் நாட்டில் அனைத்து உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலையை 10%க்கும் மேல் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :