Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா ஊரடங்கால் நஷ்டத்தை சந்தித்த சிறு,குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

கொரோனா ஊரடங்கால் நஷ்டத்தை சந்தித்த சிறு,குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

By: Nagaraj Thu, 04 June 2020 10:55:53 AM

கொரோனா ஊரடங்கால் நஷ்டத்தை சந்தித்த சிறு,குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

இந்தியாவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் பல சிறு, குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் அபாயத்திற்கு உள்ளாகியிருப்பதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தியும் பொருளாதாரமும் கூட பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து தொழில்நிறுவனங்களுக்கும் உதவுவதற்காக 20 லட்சம் கோடி கடனுதவிகளை அறிவித்தது.


small companies,corona. closure,risk ,சிறு நிறுவனங்கள், கொரோனா. மூடப்படும் நிலை, அபாயம்

இந்நிலையில் அகில இந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சிறு, குறு தொழில்செய்வோர், தொழில்முனைவோர், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இதுகுறித்து விவாதித்துள்ளது. அதில் 37% சுயதொழில் புரிவோரும், 35% சிறு,குறு நிறுவனங்களும் மீட்க முடியாத அளவிற்கான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் 32% சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பழைய நிலைக்கு மீள ஆறுமாத காலத்திற்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிறு நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் அபாயத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags :