Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

By: Monisha Wed, 25 Nov 2020 3:43:41 PM

சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

chennai,fever,doctors,warning,rain ,சென்னை,காய்ச்சல்,மருத்துவர்கள்,எச்சரிக்கை,மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் இரவு நேரத்தில் கடும் குளிரும் வாட்டுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் எளிதாக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே தேவையான தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். குடிநீரை காய்ச்சி அருந்தும் போது சூடாகவே பயன்படுத்த வேண்டும் என்றும் அப்போது தான் குடிநீரில் உள்ள கிருமிகளில் இருந்து நோய் பரவாமல் தடுக்க முடியும் என்றும் டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.

Tags :
|