- வீடு›
- செய்திகள்›
- ஆர்.எம்.வீரப்பன் ஆஸ்பத்திரியில் அனுமதி... காங்கிரஸ் எம்.பி., நேரில் சென்று சந்திப்பு
ஆர்.எம்.வீரப்பன் ஆஸ்பத்திரியில் அனுமதி... காங்கிரஸ் எம்.பி., நேரில் சென்று சந்திப்பு
By: Nagaraj Mon, 25 Sept 2023 1:14:53 PM
சென்னை: உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி... முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆா் கழக நிறுவனருமான ஆா்.எம்.வீரப்பன் (98) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வயது முதிா்வு காரணமாக தீவிர அரசியல் பணிகளில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வரும் ஆா்.எம்.வீரப்பனுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
சில மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு தொடா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உடல் நிலை மேம்படும் வரை மருத்துவக் கண்காணிப்பில் அவா் இருப்பாா் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் எம்பி சு.திருநாவுக்கரசா், எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனா். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனா்