Advertisement

கொடைக்கானலுக்கு அடுக்கம் பாதை வழியாக சாலை ரெடி

By: Nagaraj Wed, 23 Dec 2020 1:42:35 PM

கொடைக்கானலுக்கு அடுக்கம் பாதை வழியாக சாலை ரெடி

சாலை ரெடி... கொடைக்கானலுக்கு அடுக்கம் பாதை வழியாக செல்வதற்கு அற்புதமான சாலை தயாராகி உள்ளது.

கொடைக்கானலுக்கு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக காட்ரோடு, ஊத்து பாதை வழியாக செல்லலாம். இது முக்கியமான பாதை. ஆனால் மிகவும் சுற்றிச் செல்லும் பாதை. மற்றொரு பாதை பழனி வழியாக பெருமாள் மலையை அடைவது.

இந்த இரண்டில் காட்ரோடு பாதை தான் சிறந்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவி மற்றும் அடுக்கம் கிராமம் வழியாக செல்ல அற்புதமான பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

kodaikanal,shelf road,works,completed ,
கொடைக்கானல், அடுக்கம் சாலை, பணிகள், நிறைவடைந்துள்ளன

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி 95% முடிவடைந்ததை அடுத்து மக்கள் பாதையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தேனி மாவட்டம் வழியாக கொடைக்கானல் செல்பவர்கள் இந்த பாதை வழியாக சென்றால் 40 கிமீ தூர பயணத்தை மிச்சப்படுத்தலாம்.

பெரியகுளத்தில் இருந்து 40 கிமீ தூரம் சென்றால் கொடைக்கானலை அடையலாம். இந்த பாதையில் செல்ல வனத்துறை அனுமதி தேவை. பாதையின் நடுவே மூன்று பாலங்களை கட்டி வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட உடன் மக்கள் முறையாக பயன்படுத்த தொடங்கலாம். 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கிய இந்த திட்டத்திற்கு 2011-12ஆம் ஆண்டில் ஜெயலலிதா புத்துயிர் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பணிகள் சற்று தொய்வடைந்தது. பிறகு 2014இல் பணிகள் மீண்டும் வேகமெடுத்து தற்போது 95% பணிகள் நிறைவடைந்துள்ளன.

Tags :
|