Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அந்தரத்தில் தலைகீழாக நின்ற ரோலர் கோஸ்டர்: 3 மணி நேர போராட்டத்திற்கு பின் 8 பேர் மீட்பு

அந்தரத்தில் தலைகீழாக நின்ற ரோலர் கோஸ்டர்: 3 மணி நேர போராட்டத்திற்கு பின் 8 பேர் மீட்பு

By: Nagaraj Wed, 05 July 2023 9:39:10 PM

அந்தரத்தில் தலைகீழாக நின்ற ரோலர் கோஸ்டர்: 3 மணி நேர போராட்டத்திற்கு பின் 8 பேர் மீட்பு

விஸ்கான்சின்: பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக் கொண்டிருந்த ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணம் ஃபாரஸ்ட் கவுண்டியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக் கொண்டிருந்த ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றது.

rescued,fire,roller coaster,upside down,level ,மீட்கப்பட்டனர், தீயணைப்பு, ரோலர் கோஸ்டர், தலைகீழாக நின்றது, நிலை

இதனால் அதில் பயணம் செய்த 8 பேர் சில மணி நேரங்கள் தலைகீழாக அந்தரத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தரையிலிருந்து 100 அடி உயரத்திற்கு மேல் ரோலர் கோஸ்டர் நின்றதால், அதற்கேற்ப சாதனங்களை கொண்டுவந்து மீட்பு நடவடிக்கைகளை தொடங்க 2 மணி நேரங்கள் ஆகின. 3 நகரங்களை சேர்ந்த தீ அணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரோலர் கோஸ்டரில் சிக்கிக்கொண்ட அனைவரும் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Tags :
|