Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்தார்

வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்தார்

By: Karunakaran Fri, 13 Nov 2020 08:05:04 AM

வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்தார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய 77 வயது ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் ஜனவரி மாதம் 20-ந்தேதி அந்த நாட்டின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கான ஆயத்த நடவடிக்கைகளில் அவரும், அவரது குழுவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமான வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். வெள்ளை மாளிகை நிர்வாகம், ரான் கிளைன் வசம் வரும். வெள்ளை மாளிகையின் மிக முக்கிய பதவி இது. ஜனாதிபதியின் அன்றாட செயல்பாடுகளை நிர்வாகம் செய்வார்.

ron klein,joe biden,washington house,staff ,ரான் க்ளீன், ஜோ பிடன், வாஷிங்டன் ஹவுஸ், பணியாளர் குழு தலைவர்

வெள்ளை மாளிகையில் ரான் கிளைன் கவனத்துக்கு வராமல் ஒரு துரும்பு கூட அசைய முடியாது. இவர் ஜோ பைடனின் மூத்த உதவியாளர் ஆவார். 1980-களில் இருந்து ஜோ பைடனிடம் இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளராகவும், துணை ஜனாதிபதி அல் கோரின் பணியாளர் குழு தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

ரான் கிளைன் குறித்து ஜோ பைடன் கூறுகையில், அவருக்கு ஆழ்ந்த, மாறுபட்ட அனுபவம் உண்டு. அரசியல் அரங்கில் அனைத்து தரப்பினருடனும் பணியாற்றும் திறனும் இருக்கிறது என கூறினார். இதனால், தனது தேர்வு பற்றி ரான் கிளைன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags :