Advertisement

ரூ. 1000 உரிமைத்தொகை – இவர்களுக்கு கிடையாதாம்

By: vaithegi Sun, 16 Apr 2023 3:36:38 PM

ரூ. 1000 உரிமைத்தொகை – இவர்களுக்கு கிடையாதாம்

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 2023 -2024 ஆண்டுக்காண பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

மேலும் இத்திட்டத்தை அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் நிபந்தனைகள் அடிப்படையில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

entitlement,budget,chennai ,உரிமைத்தொகை ,பட்ஜெட் ,சென்னை

இதையடுத்து இந்நிலையில் வெளியான தகவலின் படி வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பில் இருந்த தகவல்கள் வந்துள்ளது. எனினும் இதுவரை அரசிடமிருந்து திட்டம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் பற்றி எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை

Tags :
|