Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: பிரியங்கா உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: பிரியங்கா உறுதி

By: Nagaraj Tue, 17 Jan 2023 10:15:25 PM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: பிரியங்கா உறுதி

கர்நாடகா: , காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதத்துக்கு முன்னதாக தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.

குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தது.

a new promise,karnataka,priyanka-gandhi, ,கர்நாடகா, பிரியங்கா காந்தி, புதிய வாக்குறுதி

இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பிரியங்கா காந்தி இந்த வாக்குறுதியை அளித்தார். கிருஹ லட்சுமி என பெயரிடப்படும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி இல்லத்தரசிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags :