Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செமிகண்டக்டர் உற்பத்திக்காக ரூ.3200 கோடி முதலீடு: ஏஎம்டி நிறுவனம் தகவல்

செமிகண்டக்டர் உற்பத்திக்காக ரூ.3200 கோடி முதலீடு: ஏஎம்டி நிறுவனம் தகவல்

By: Nagaraj Fri, 28 July 2023 8:33:20 PM

செமிகண்டக்டர் உற்பத்திக்காக ரூ.3200 கோடி முதலீடு: ஏஎம்டி நிறுவனம் தகவல்

குஜராத்: முதலீடு செய்யப்படும்... அடுத்த 5 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்திக்காக இந்தியாவில் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்படும் என ஏ.எம்.டி. நிறுவனம் அறிவித்துள்ளது.

குஜராத்தின் காந்தி நகரில் ''செமிகான் இந்தியா'' என்ற பெயரில் நடைபெற்ற செமிகண்டர் நிறுவனங்களின் மாநாட்டில் மைக்ரான், ஃபாக்ஸ்கான், ஏ.எம்.டி., ஐ.பி.எம் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, செமி கண்டக்டர் உற்பத்தி, பயன்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.

gujarat,semiconductor,test facility,technology,investor ,குஜராத், செமிகண்டக்டர், சோதனை வசதி, டெக்னாலஜி, முதலீட்டாளர்

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 2 ஆண்டுகளில், இந்தியாவின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நிலையான மற்றும் சீர்திருத்தம் சார்ந்த அரசின் நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் அதிகம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதியை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளதாகவும், இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மைக்ரான் டெக்னாலஜி நிறுவன சி.இ.ஓ. சஞ்சய் மெரோத்ரா அறிவித்துள்ளார்.

Tags :