Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம்

By: vaithegi Tue, 05 July 2022 3:52:15 PM

சென்னையில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் வீதம் நாளுக்கு நாள் உயந்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், பெரும்பாலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசு விழாக்கள், திருமணம், திருவிழா, மால்கள், கோவில்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

face mask,fine ,முகக்கவசம் ,அபராதம்

மேலும், தவிர்க்கமுடியாத பட்சத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா பரவுதலை கருத்தில் கொண்டு கண்டிபாக முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பரவுதலின் வேகம் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும், பொது இடங்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags :