Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ. 500 க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் .... ராஜஸ்தான் அரசு

ரூ. 500 க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் .... ராஜஸ்தான் அரசு

By: vaithegi Mon, 19 Dec 2022 8:36:13 PM

ரூ. 500 க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் ....  ராஜஸ்தான் அரசு

ராஜஸ்தான் : கச்சா எண்ணெய் விலையை பொறுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக சிலிண்டர்களின் விலை அதிக அளவில் உயர்ந்து உள்ளது.

இடையில் சில மாதங்கள் மத்திய அரசு அளிக்கும் சிலிண்டருக்கான மானியமும் அளிக்கப்படாமல் இருந்தது. சமீப காலமாக தான் மீண்டும் சிலிண்டருக்கான மானியம் அளிக்கப்படுகிறது.

rajasthan,gas cylinder ,ராஜஸ்தான் ,எரிவாயு சிலிண்டர்

இந்நிலையில், சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1100 ஐ தாண்டி உள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.500 ஆக குறைக்கப்படும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 500 க்கு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :